முன்னாள் காங்கிரஸ் தலைவர் மருத்துவமனையில் அனுமதி!
EVKS Elangovan admitted hospital
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
ஆனால் அவரது மகன் மறைவிற்குப் பின்னர் பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்து விட்டு வீட்டிற்கு செல்லும் நிர்வாகிகளை மட்டும் சந்தித்து பேசுவார்.
இருப்பினும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து விட்டு இரவு வீடு திரும்பிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.
இதனை அடுத்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்றிரவு போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டது.
அங்கு அவருக்கு, எந்த விதமான காய்ச்சல் பாதித்துள்ளது என மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்துவிட்டு, அவர் குணமடைய கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர்.
English Summary
EVKS Elangovan admitted hospital