சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல்! அதிகனமழை, சூறாவளி காற்று!
Fengal Cyclone Chennai 100km
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே மரக்காணம் பகுதியில் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளதாவும், மணிக்கு 7 கி.மீ வேகத்தில் வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Fengal Cyclone Chennai 100km