திசை மாறிய ஃபெஞ்சல் புயல்: சென்னைக்கு 90 கி.மீ சூறாவளி காற்று எச்சரிக்கை!
Fengal Cyclone direction change
ஃபெஞ்சல் புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது, புயலின் திசை மாற்றம் காரணமாக மரக்காணம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்று வேக விவரங்கள்:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை செல்லக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
English Summary
Fengal Cyclone direction change