ஃபெஞ்சல் புயல்: களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
Fengal Cyclone DyCM Udhay
சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மதியம் 3 மணி நிலவரப்படி எந்தெந்த பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது, நிவாரண முகாம்கள் செயல்படும் விதம், பொதுமக்களின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அறைக்கு வருகிற அழைப்புகளின் விவரம் உள்ளிட்டவை குறித்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும், புயல் கரையை கடக்கும் போதும், அதற்கு பின்னரும் தொடர்ந்து கண்காணித்து, மக்களை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, புரசைவாக்கம் தானா தெரு பகுதியில் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருவதை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
English Summary
Fengal Cyclone DyCM Udhay