மாசி திருவிழா - திருச்செந்தூரில் இன்றுக் கொடியேற்றம்.!
flag hoisting in thiruchenthur murugan temple for masi festival
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும். 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் கொடி பட்டம் வீதியுலா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று காலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்தக் கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30-க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. காலை 5.20 மணிக்கு கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, திருவாவடுதுறை ஆதீனம் சங்கரலிங்கம் தம்பிரான் சுவாமிகள், ஏரல் சேர்மன் சுவாமி கோவில் தக்கார் கருத்தபாண்டி நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, கவுன்சிலர் ரேவதி கோமதிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
flag hoisting in thiruchenthur murugan temple for masi festival