காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.730 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்பதால் தற்போது 25.000 கனஅடி நீரானது காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது. எனவே காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் மற்றும் துணி துவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள். அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100. தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் மற்றும் குமாரபாளையம் வட்டத்திற்கு 97869 84577, திருச்செங்கோடு வட்டத்திற்கு 94450 00545, பரமத்திவேலூர் வட்டத்திற்கு 94450 00546, மோகனூர் வட்டத்திற்கு 99524 12755, ஆகிய எண்களில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood Warning for namakkal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->