கோவை மக்களே உஷார்.!! பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்ட பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணை நிரம்ப உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பில்லூர் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வருவதால் நேற்று 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 97 அடியாக உயர்ந்துள்ளது. பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியை எட்ட இன்னும் 3 அடி உள்ள நிலையில் அணைக்கு வரும் 14,000 கன அடி நீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விட வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood warning in Bhavani river


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->