தர்மபுரி அருகே சோகம் - நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுமி பலி - 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் அபி - நாகவேணி தம்பதியினர். இவர்களுக்கு கவிநிலா என்ற மகள் உள்ளார். தம்பதியினர் இருவரும் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இவர்களுடன் காரிமங்கலம் அருகே உள்ள பூமாண்டஅள்ளி கிராமத்தில் வசிக்கும் வள்ளி என்ற பெண்ணும், வேலைபார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் வள்ளி பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த கிராமமான பூமாண்டஅள்ளிக்கு சிறுமி கவிநிலாவை மட்டும் அவரது பெற்றோர் அனுமதியுடன் அழைத்து வந்துள்ளார். 

இதையடுத்து நேற்று மதியம் சிறுமி கவிநிலா வள்ளியிடம் கூறிவிட்டு தர்மன் வீட்டின் மொட்டை மாடிக்கு விளையாட சென்றுள்ளார். அப்போது அந்த மொட்டை மாடியில் உள்ள அறையில் இருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இந்த விபத்தில் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கவிநிலா தூக்கி வீசப்பட்டு உடல் துண்டு, துண்டாகி கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சிறுமி உயிரிழந்த செய்தி பெங்களூருவில் வசித்து வரும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைகேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனே விரைந்து வந்து தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பன்றிகளை வேட்டையாட வெடி மருந்துகளை வாங்கி பக்கத்து வேட்டைச் சேர்ந்த தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேர் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்தது தெரிய வந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl died for country bomb blased in dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->