வேங்கைவயல் விவகாரத்தின் குற்றப்பத்திரிகை நம்பிக்கை அளிக்கவில்லை - ஜி.கே.வாசன்.!
gk vasan tweet about vengaivayal charge sheet
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிக்கு உருசிய தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- "வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.
சம்பவத்தின் உண்மைநிலையை வெளிவர வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும். வேங்கைவயல் பிரச்சனை சம்பந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தமிழக அரசின் தகவல் உண்மை நிலையை வெளிக்கொணரவில்லை என்ற செய்திகள் வெளிவந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தப் பிரச்சனை சம்பந்தமாக பல்வேறு மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டுள்ளது.
தமிழக அரசு சமுதாயத்தில் இது போன்ற ஒரு பிரச்சனை எழக்கூடாது என்பதற்கு ஏற்ப விசாரணை நடத்தி, உண்மைக்குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய தண்டனை கிடைக்க வழி வகைச் செய்திருக்க வேண்டும். வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த பிரச்சனை தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உண்மை நிலை வெளிவரவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், சமூகநீதி காக்கப்படவும் வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார் .
English Summary
gk vasan tweet about vengaivayal charge sheet