வெம்பக்கோட்டை அகழாய்வு - இரண்டு கல்மணிகள் கண்டுபிடிப்பு.!
green stones found in vembakottai excavation
விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அங்கு இதுவரைக்கும் பத்து குழிகள் தோண்டப்பட்டு ஆபரணங்கள், செப்புக்காசுகள், சுடுமண் காதணிகள், சூது பவளம், உள்பட 1560 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஒன்பதாவது அகழாய்வு குழியை மேலும் தோண்டியபோது பச்சை நிறத்திலான இரண்டு கல்மணிகள் கிடைத்துள்ளன. இந்த கல்மணிகள் பெண்கள் அணியக்கூடிய ஆபரணங்களாகவும், ஆண்கள் அணியும் மோதிரத்தில் பதிப்பதற்காகவும் பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவிக்கையில், "ஏற்கனவே சிவப்பு, மஞ்சள், ஊதா, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களிலும் கல்மணிகள் கிடைத்துள்ளன. இதனால், முற்காலத்தில் இப்பகுதியில் கல்மணிகள், பாசிமணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்டவை தயாரிப்பு கூடம் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. முதல் இரண்டு கட்ட அகழாய்வைவிட தற்போது கூடுதலாக தொல் பொருட்கள் கிடைத்து வருகிறது என்றுத் தெரிவித்தார் .
English Summary
green stones found in vembakottai excavation