தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Increase in dengue cases across Tamil Nadu Public Health Department alert
தமிழகத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் சுகாதாரத்துறை அலர்ட் நிலையில் உள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
ஜனவரி முதல் இதுவரை, மாநில அளவில் 23,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 180 பேர் வரை புதிய தொற்றால் பாதிக்கப்படுவதால் சுகாதாரத்துறை சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்தனர் என தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு காரணம் மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கைகள்:
மழைநீர் தேங்கிய பகுதிகளில் உருவாகும் கொசுக்கள் தான் இந்த தொற்றின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், மருந்து தெளித்தல், மற்றும் தண்ணீர் தேங்கலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் இந்த பரவல் குறித்து பேசுகையில்,
தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றாலும், மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.மழைநீர் தேங்கிய இடங்களை அகற்ற வேண்டும், இல்லையெனில் கொசுக்கள் உருவாகும் சூழல் நீடிக்கும் என அவர் எச்சரித்தார்.
மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுக்கடி தடுக்கும் வலையையும், க்ரீம்களையும் பயன்படுத்த வேண்டும். சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டெங்கு பரவல் ஜனவரி வரை நீடிக்கலாம் என சுகாதாரத்துறை கணித்துள்ளதால், மேலும் பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மக்களின் ஒத்துழைப்பு மற்றும் சுகாதாரத்துறையின் முன்னெடுப்புகள் மூலம் பரவல் தடுக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
English Summary
Increase in dengue cases across Tamil Nadu Public Health Department alert