நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமைதான் வெளிப்பட்டுள்ளது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது முதல், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத பள்ளி மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

தற்போது அமைந்துள்ள திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மந்திரத்தை மறந்து, தந்திரம் செய்து கொண்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். மேலும், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைத்து ஒப்பேத்தி அவர்களின் வாயை அடைக்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் வகையிலான மசோதா ஒன்றை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.

திருப்பி அனுப்புவதற்கான காரணமாக, நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளதாகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களை நீட்தேர்வு காத்து வருவதாகவும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், நீட் தேர்வு விலக்கு பெறுவது என்பது சட்டப் பிரச்சினை ஆகும். அதிமுக அரசு கையாண்ட விதத்தில்தான், திமுக அரசு நீட் விவகாரத்தை கையாண்டு வருகிறது.

நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமைதான் தற்போது வெளிப்பட்டுள்ளது" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JEYAKUMAR SAY ABOUT NEET ISSUE FEB


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->