குமரி மக்களே உஷார்.!! ஆட்சியர் விடுத்த திடீர் எச்சரிக்கை.!!
Kanniyakumari district collector issued flood warning
கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும் மற்றும் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்து வரும் கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதை அடுத்து மாவட்டம் முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதிகப்படியான நீர் வெளியேறுகிறது.
இதன் காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு பேச்சுப் பாறை அணையில் இருந்து 3000 கடனில் நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடுதல் நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.
எனவே தாமிரபரணி மற்றும் இதர ஆறுகளின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த செய்தி குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Kanniyakumari district collector issued flood warning