நாளை தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!
Local Holyday in Tamilnadu 3 districts
நாளை புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, ஏப்ரல் 7 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் மு. அருணா. இதனால், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படாது.
தென்காசி மாவட்டத்தில், அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 7 மற்றும் 11 ஆகிய இரு நாட்களும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் வெளியிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ஏப்ரல் 7 அன்று அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடியே நடைபெறும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், பங்குனி தேரோட்டம் நடைபெறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலை முன்னிட்டு, அதே தேதியில் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் மோகன்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், ஏப்ரல் 7 அன்று நடைபெறவிருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஏப்ரல் 8க்குத் மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Local Holyday in Tamilnadu 3 districts