மதுரை திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கேட்கும் உறவினர்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


மதுரை திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கேட்கும் உறவினர்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.!!

கடந்த 5-ம் தேதி அதிகாலை மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவினை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆறு மற்றும் அதன் கரையோரங்களில் திரண்டிருந்தனர். 

அப்போது, யானைக்கல் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நீரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதேபோல் விளாச்சேரி ஜோசப் நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஆற்றில் மூழ்கியும், ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்துள்ளார்.

சித்திரை விழாவின் போது நடந்த இந்த துயர நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரைக்கும் மாநில அரசு நிவாரண உதவி ஏதும் அறிவிக்கவில்லை. 

இதனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நிவாரண உதவி மற்றும் அரசு உதவிகளை வழங்க கோரி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai chithirai festival died peoples family members protest in madurai collector office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->