தமிழகத்தில் எக்ஸ்இ வகை ஓமிக்ரான் தொற்று இல்லை - மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!  - Seithipunal
Seithipunal


சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளை, மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகிய இருவரும் ஆய்வு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கையில், 

"ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் லிஃப்ட் வசதியும், சுமார் 3.5 லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடமும் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்ட பேரவையில் அறிவித்தபடி தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 364.22 கோடி செலவில் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், 1583 படுக்கைகள் கூடுதலாக அமைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை வருகின்ற 14-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று  எண்ணிக்கை சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில், இதனை கண்காணிப்பதற்கு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுதப்பட்டுள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து உறுதி செய்யப்படும் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது

நேற்று மும்பையில் எக்ஸ்இ வகை தொற்று என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு அந்த வகை தொற்று இல்லை என்று சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் புதிய வகை தொற்று எதுவும் இல்லை" என்று, மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister ma subramaniyan say about xe omicron


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->