தமிழர்களை இழிவுபடுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கே வருவதா? சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #GoBackModi போஸ்டரால் பரபரப்பு!!
modi coming chennai against gobackmodi poster
பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாள் தியான நிகழ்வாக கன்னியாகுமரிக்கு வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள உள்ளார். இந்தநிலையில், பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #GoBackModi போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது.
இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சென்னை முழுவதும் இரவோடு இரவாக #GoBackModi என்ற போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
“ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை இழிவுபடுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கே வருவதா? என போஸ்டருக்கு தலைப்பிட்டு ஹாலோ நெட்டிசன்களே ரெடி ஸ்டார்ட் 1 2 3, கோ பேக் மோடி என எக்ஸ் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டிங்க்கு அழைப்புவிடும் வகையிலும், இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே எனவும் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்ட்ரல் இரயில் நிலையம், GH, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம், எம்.எல்.எ விடுதி, சென்னை பிரஸ் கிளப் , அண்ணா அறிவாலயம், அன்பகம் சாலை போன்ற முக்கிய இடங்களில் இந்த போஸ்டர் அதிக அளவில் கோ பேக் மோடி என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
modi coming chennai against gobackmodi poster