நாமக்கல் அருகே அரசு பேருந்து மீது மோதிய மாட்டுவண்டி.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூரில் இருந்து மோகனூருக்கு மாநகர பேருந்து ஒன்று ஐம்பது பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே மோகனூரில் இருந்து வேலூர் நோக்கி, மாடுகள் இல்லாத வண்டியை சரக்கு வாகனம் ஒன்று பின்பகுதியில் கட்டி இழுத்துக்கொண்டு வந்திருந்தது. 

இந்த சரக்கு வாகனம் செங்கப்பள்ளி அருகே வந்துகொண்டிருந்த போது, பின்பகுதியில் கட்டப்பட்டிருந்த மாட்டு வண்டியின் கயிறு திடீரென அறுந்ததனால் சாலையில், தறி கெட்டு ஓடி எதிரே வந்த மாநகர பேருந்து மீது மோதியது. இதில், மாட்டு வண்டி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது. 

இதைபார்த்து சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் பேருந்தில் பயணம் செய்த ஐம்பது பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன் பின்னர் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் கீழே இறக்கி விட்டப்பட்டு, மாற்று பேருந்தின் மூலம் மோகனூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதற்கிடையே விபத்திற்கு காரணமான சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அதன் பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near namakkal govt bus miror broke for bullock cart hit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->