ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற முதியவரால் பரபரப்பு...!
Old Man attempt suicide Front of Collector Office
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்ககுளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதியவர் ஒருவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை உடனடியாக மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்த சுப்பையா என்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமான நிலத்தை ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மனவிரக்தி காரணமாக தற்கொலை செய்ய முயற்சி செய்தேன் என தெரிவித்தார்.
இதனையடுத்து தல்லாகுளம் காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
English Summary
Old Man attempt suicide Front of Collector Office