தேனி || 150 வருடமாக தொடரும் அவலம் - உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி தூக்கிச் சென்ற கொடூரம்.!
peoples dolly caried sick womens in theni for no road facility
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர் காலனி கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் மக்கள் பெரியகுளம் வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால், சின்னூர் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களாக மலை கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இதற்கிடையே, சின்னூர் காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மலைக்கிராம இளைஞர்கள் 10 பேர் ஒன்றிணைந்து டோலி கட்டி 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூக்கி சென்றனர். பின்னர் சின்னையம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் தெரிவித்துள்ளதாவது:- “திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோல் வேறு சில கிராமங்களும் உள்ளது. நான் சமீபத்தில்தான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
ஆனால், ஏற்கனவே பலமுறை இதுபோன்ற சம்பவங்களை அரசு கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளேன். சில இடங்களில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, நிச்சயமாக அந்த கிராம மக்களுக்கு சாலை வசதி அமைக்க உறுதி செய்வேன் என தெரிவிக்கிறேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளகெவி ஊராட்சி மன்ற தலைவர் பேசியதாவது:- “150 வருடங்களாக இதே நிலைதான் உள்ளது. இந்த ஊரில் தீயணைப்புத் துறையினர் மூலமாக பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக கொண்டு வரும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதுவரை எங்களது கிராமங்களில் உயிர்சேதம் ஏற்பட்டதில்லை.
அதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம், எங்களது எம்.எல்.ஏ, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரது பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சிக் காலத்திலேயே அவர்களுக்கு சாலை வசதிகளை செய்துகொடுக்க வனத்துறையின் மூலம் தடையில்லா சான்றும் பெற்றுவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
peoples dolly caried sick womens in theni for no road facility