மத வெறுப்பு பிரசாரம்: பிரதமருக்கு கடும் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வைகோ, மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 

முதற்கட்ட தேர்தலில் சாதகமான சூழல் இல்லாததை உணர்ந்த பாஜக தற்போது நடக்கும் பிரசாரத்தில் மத கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசாரத்தில் அவருடைய இஸ்லாமிய வெறுப்பை தெரிவித்துள்ளார். பிரதமரின் பேச்சு பல நாடுகளில் கண்டனத்துக்குரியதாக மாறி உள்ளது. மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிரதமரின் பேச்சை தேர்தல் ஆணையம் வேண்டுமானால் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் ஆனால் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து சீமான் தெரிவித்திருப்பதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் விதமாக பேசி இருப்பது கண்டனத்திற்குரியது. 

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே இஸ்லாமியர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மண்ணில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்கள் இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்டனர். 

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை அந்தியர்கள் போலவும் இந்துக்களின் சொத்துக்களை அபகரிப்பதாகவும் சித்தரிக்கிறார். இஸ்லாமியர்கள் குறித்த வெறுப்புக்கு பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi against condemnation 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->