ரூ.4 ஆயிரம் கோடி திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


ரூ.4 ஆயிரம் கோடி திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார் பிரதமர் மோடி.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி பித்தோராகார் பார்வதி குந்த் பகுதியில் பூஜைகளை மேற்கொண்டார். அதன் பின்னர், ராணுவம், இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் எல்லை சாலைகள் அமைப்பினருடன் உரையாடினார்.

இதைத்தொடர்ந்து அவர் அல்மோரா மாவட்டத்தில் ஜாகேஷ்வர் கோவிலில் இறைவணக்கமும் மேற்கொண்ட பின்பு, ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புடைய திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது, "இது உத்தரகாண்டின் தசாப்தம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உத்தரகாண்ட் பெறும். அந்த ஒரு நோக்கத்துடன் எங்களுடைய அரசு பணியாற்றி வருகிறது. 

இதன்படி, ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள எந்த நாடும் அடையாத பகுதியை நம்முடைய சந்திரயான்-3 சென்றடைந்தது. 

சந்திரயான் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என்று இந்தியா பெயரிட்டது. விண்வெளி மட்டுமில்லாமல் விளையாட்டிலும் இந்தியாவின் வலிமையை உலகம் இன்று பார்த்து வருகிறது. முதன்முறையாக இந்திய வீரர்கள் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்து உள்ளனர் என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi laide foundation work of project works in uttarkhant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->