டெண்டர் எடுக்க ஒப்பந்ததாரர்களிடம் பணம் பறிப்பு! CM ஸ்டாலினுக்கு பறந்த புகார்!
Scam CM Stalin Complaint TN GOvt
பொதுப்பணித்துறையில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் எடுக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களிடம் சைட் விசிட் சான்றிதழ் நடைமுறையை காரணம் காட்டி பொறியாளர்கள் பணம் பறிப்பதாக முதல்வரின் தனி பிரிவுக்கு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்
அதில், பொதுப் பணித்துறை, சேப்பாக்கம் வளாகத்தில் இருக்கின்ற வட்ட அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களில் கோரப்படுகின்ற டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெறுவதை எங்கள் சங்க நிர்வாகிகளால் நேரிலும் பலமுறை கடிதங்கள் மூலமாகவும் தடுத்து நிறுத்திட கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், சேப்பாக்க வளாகத்திலுள்ள கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்கள் இதனை கண்டுகொள்ளால் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பணித் தளத்தினை பார்வையிட்டு அதற்கான சான்றுகள் (Site Visit Certificate) டெண்டருடன் சமர்ப்பித்தால் மட்டுமே டெண்டர்கள் போட இயலும் என்கிற நிபந்தனையை டெண்டர் போட நிர்ணயித்துள்ளனர். இந்த டெண்டர் நிபந்தனையை எடுக்க பல்வேறு முறை கேட்டுக் கொண்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது ஒன்றினை வைத்துக் கொண்டு ஒருசில ஒருசில வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே டெண்டரில் கலந்து கொள்ள முடியும் என்கிற நிலை உள்ளது. Site Visit சான்றினை பெற பலமுறை பணித் தளத்தைச் சென்று பார்வையிட்டு வந்தபின்னரும், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்களிடம் சான்று பெற முடியாத நிலை உள்ளது.
இச்சான்று ஒன்றினை பகடைகாயாக வைத்துக் கொண்டு, ஒப்பந்ததார்களிடம் பணம் பறிக்கும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால் ஊழல் அதிகரித்து ஆளுகின்ற அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகின்றது.
எனவே, இந்த நிபந்தனையை டெண்டர் போடுவதிலிருந்து எடுத்துவிட்டால், பெருமளவு ஊழல் கட்டுப்படுத்தப்படும். ஆகையால் இதுகுறித்த தக்க விசாரணை செய்து தேவையான ஆணைகளை வெளியிட அரசினை கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இதுகுறித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், இதற்காக பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதுடன், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுக்க நேரிடும் என தெரிவித்துக் கொண்டு, இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்ட விவரத்தினை எங்கள் சங்கத்திற்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Scam CM Stalin Complaint TN GOvt