99 கடைகளுக்கு கடை ஒதுக்கீட்டு ஆணை..முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் முதலமைச்சர்  ந. ரங்கசாமி அவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட 99 கடைகளுக்கான கடை ஒதுக்கீட்டு ஆணையினைப் பயனாளிகளுக்கு, புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் 26.02.2025 வழங்கினார்.

புதுச்சேரி பொலிவுறு நகர மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், புதுச்சேரி அண்ணா திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளை சுமார் ரூ.12.5 கோடி மதிப்பில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதன் முதற்கட்டமாக, லப்போர்த் வீதியில் உள்ள 20 கடைகளும், சின்ன சுப்பராயப் பிள்ளை வீதியில் உள்ள 79 கடைகளும் கட்டி முடிக்கப்பட்டு ஏற்கனவே அங்கு கடையை நடத்தி வந்த பழைய பயனாளிகளுக்கே ஒதுக்கீடு செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி அவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட 99 கடைகளுக்கான கடை ஒதுக்கீட்டு ஆணையினைப் பயனாளிகளுக்கு, புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (26.02.2025) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது, சட்டமன்ற உறுப்பினர் திரு G. நேரு (எ) குப்புசாமி, புதுச்சேரி நகராட்சி ஆணையர் திரு M. கந்தசாமி, செயற்பொறியாளர் திரு A. சிவபாலன், வருவாய் அதிகாரிகள் 
திரு G. சத்தியநாராயணன், மற்றும் G. பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shop allotment order for 99 shops. Chief Minister Rangasamy presented!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->