புயல் எதிரொலி - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக  மாறியுள்ளது. இதன் எதிரொலியால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

அதாவது, பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
இந்த எச்சரிக்கை கூண்டு திடீர் காற்று மற்றும் மழை உருவாவதை எச்சரிப்பது ஆகும். 

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பதை எச்சரிக்கிறது.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது துறைமுகத்தின் வலதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பதை தெரிவிக்கிறது.

கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை கூண்டு துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என எச்சரிப்பது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

storm warning cage hoisted in port


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->