விழுப்புரம் || நடுரோட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த துணை தாசில்தார் - போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவர் மேல்மலையனுார் தாலுகாவில் துணை தாசில்தாராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் இவர், நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். 

ஆனால், பூங்காவனம் அலுவலகத்திற்கு செல்லாமல் மேல்மலையனூர்-வளத்தி சாலையில் இறங்கி அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள், பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் பூங்காவனம் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் இரு வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி லட்சுமி, அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து பூங்காவனத்தின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sub thasildar sucide in vilupuram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->