தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? - வெளியானது அதிகாரபூர்வ தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3ஆம் பருவத் தேர்வுகள் கடந்த 2 ஆம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்.13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் 10, 12இல் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22, 23-க்கு தள்ளிவைக்கப்பட்டன. இதனால், கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், கோடை விடுமுறை அறிவிப்புத் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில், "1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைகிறது. அவர்களுக்கு ஏப்.6 முதல் கோடை விடுமுறையாகும். அதேபோல், 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.6 முதல் 21-ம் தேதி வரை ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகள் நிமித்தம் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப்.22, 23-ம் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும்.

தொடர்ந்து ஏப்.24-ல் தொடங்கி கோடை விடுமுறை வழங்கப்படும். பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும். அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்.26ஆம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

summar holiday update


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->