துப்பாக்கியால் சுட்டு தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு!....கூட்டம் கூட்டமாக படையெடுப்பதாக மீனவர்கள் அச்சம்! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருவது வாடிக்கையாகி வரும்  நிலையில், அண்மையில் இது தொடர்ந்து மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தும், இதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 21-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த 5 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் கைது செய்துள்ளனர்.


இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தொடர்ந்து  கச்சத்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் விரைந்து கரைக்கு திரும்பினர். மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு அதிக ரோந்து கப்பலில் இலங்கை கடற்படை வந்ததாக தெரிவித்துள்ள  மீனவர்கள், இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் ஒரு படகிற்கு 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu fishermen chased away with guns Fishermen are afraid of mob invasion


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->