சென்னை மக்களின் தலையில் இடியை இறக்கிய செய்தி! மக்களே என்ன செய்ய போறிங்க?! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் பொது இடத்தில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்த மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், பொது இடத்தில் திடக்கழிவை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே சொத்துவரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மேலும் ஆச்சி கொடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை 6% உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்ற மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேலும் சில தீர்மானங்கள்!

* கட்டட இடிபாடுகள் ஒரு டன் வரை கொட்டினால் ரூ.2,000-ல் இருந்து ரூ.5,000 ஆக அபராதம் உயர்வு.

* மரக்கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டினால் ரூ.200-ல் இருந்து ரூ.2,000 ஆக அபராதம் உயர்வு.

* வியாபாரிகள் குப்பை கூடை இல்லாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதம் ரூ.100-ல் இருந்து 1,000 ஆக உயர்த்த நடவடிக்கை

* பொது இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு தூய்மைப்படுத்தாமல் இருந்தால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Chennai Corporation MayorPriya 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->