ஒரே நாளில் முடிவுக்கு வந்த டாஸ்மாக் சரக்கு வாகன போராட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னை, திருமழிசையில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வேலைநிறுத்தம் ஒரே நாளில் முடிவுக்கு வந்தது.

இன்று சென்னை, திருமழிசையில் மதுபானம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மதுபானத்தை லாரிகளில் ஏற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் போராட்டம் போராட்டத்தில் இறங்கினர்.

லாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான சம்பள நிலுவை பிரச்சினையால் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சி, சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகம் நிறுத்தபட்டது.

இதனை தொடர்ந்து, சம்பள நிலுவை தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் உடனடியாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டு முடிவுக்கு வந்ததது.

சுமார் 4 மணி நேரத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விநியோகம் தொடங்கியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASMAC Lorry strike 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->