#தமிழகம் | என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்! இந்த பகுதிக்கு செல்ல 4 நாட்களுக்கு திடீர் தடை!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வனப்பகுதியில் சில நாட்களாக தொடர் கனமழை பெய்வதால் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சின்ன சுருளி அறிவுக்கு செல்ல 4 நாட்களுக்கு தடை விதிப்பதாக வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் வருகின்ற 23ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் அறிவிப்புகளை பொறுத்து இந்த தடையை நீக்குவது அல்லது தடையை நீடிப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவிகள் திடீரென வெள்ளப் பிறப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறை மற்றும் போலீசாரின் துரித நடவடிக்கையால் சுற்றுலா பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

அதே சமயத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் இந்த வெள்ளப்பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை மற்றும் அருவி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உயிரின் பாதுகாப்புக்காக தீவிர கண்காணிப்பில் எடுக்கப்பட்டு, தேவைப்பட்டால் அருவி மற்றும் நீர் நிலைகளில் குளிக்க தடையும் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Chienna Suruli fall floods


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->