அதிகாலையில் சோகம் - ரெயில் முன்பு பாய்ந்து தாய், மகன், மகள் உயிரிழப்பு.!
three peoples died in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சுண்டாபுரத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் அருகே நேற்று தண்டவாளத்தின் அருகே மூன்று பேரின் உடல் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தண்டவாளத்தின் அருகே கிடந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உயிரிழந்தவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை செய்ததில் அவர் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வரலட்சுமி, அவருடைய மகன் யுவராஜ், மகள் ஜனனி என்பது தெரியவந்தது. மேலும், கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட மூன்று பேரும் நேற்று காலை போத்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக நடந்து சென்று, வெங்கிட்டாபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்தவர்கள் கோவையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples died in coimbatore