மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனங்கள்.. MLA G.நேரு வழங்கினார்!
Three wheelers for the differently abled Presented by MLA G.Nehru
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.
புதுச்சேரி அரசு சமூகநலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கிவருகிறது.அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவை வளாகத்தில் மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகளும் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும் பலர் உடன் இருந்தனர்.
English Summary
Three wheelers for the differently abled Presented by MLA G.Nehru