பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் கிடையாதா? - மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாணை.!
TN government G.O announce for pongal gift package
வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்கு நியாய விலை கடைகளில் பச்சரிசி, கரும்பு சர்க்கரையுடன் குடும்ப அட்டை தரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற பதினைந்தாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் பொங்கல் தொகுப்பு வழங்குவார்களா? என்ற கேள்வி இருந்தது.
தற்போது, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
"தைப்பொங்கல் 2024-ம் ஆண்டு குடும்ப அட்டைதத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டு்ள்ளது.
2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் இரு நூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிருத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று செலவினம் ஏற்படும்.
கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் அட்டைத்தாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். கரும்பு ஒன்றுக்கு ரூ.33 கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரூ.1,000 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு அறிவிப்பு இடம் பெறவில்லை.
மேலும், பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் இலவச வேட்டி, சேலை வழங்கவில்லை. ஆனால், இந்த ஆண்டும் வழங்குவார்களா? இல்லையா? என்று அறிவிப்பு வெளியாகவில்லை. புதுச்சேரி அரசு பொங்கல் தொகுப்பு ஆயிரம் ரூபாய் அறிவித்த நிலையில், தமிழக அரசு பொங்கல் தொகுப்பு குறித்து அறிவித்துள்ளது.
English Summary
TN government G.O announce for pongal gift package