தமிழகத்தை சீமைக் கருவேல மரங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்து விட்டதால், மாநில அரசின் நிதியே பயன்படுத்தப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தபோது,

66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீமை கருவை மரங்களை அகற்றி உள்ளதாகவும், வேருடன் அகற்ற திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.

மேலும், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்து விட்டதால், மாநில அரசின் நிதியே பயன்படுத்தப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அப்போது, சீமைக் கருவை கருவேலமரங்களை விரகு, செங்கல் சூளை போன்றவை எரிபொருளாக பயன்படுத்துகின்றன என்றும், பசுமைக்காகவும், வாழ்வாதாரத்திற்காக மட்டுமே சீமைக்கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டன என்று நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சீமைக் கருவேல மரங்களின் இலைகளை கால்நடைகள் அதிகளவில் உட்கொண்டால் பாதிப்பு ஏற்படும் என்றும் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், "நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு சீமைக் கருவேல மரங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிய வழக்குகள் அனைத்தையும், மார்ச் மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt HighCourt seemai karuvela marankal


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->