பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணி ஜனவரி 10-ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று, கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

வேலூர், அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கரும்பு அரவையை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி தெரிவிக்கையில், "பொங்கலுக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் 1.77 கோடி சேலைகள் வழங்க உள்ளோம். 

கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் காரணமாக வேட்டி, சேலை வழங்குவதில் காலதாமதமானது. இந்தாண்டு இறுதிக்குள் வேட்டி, சேலைகளை பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்காக வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும். 

அதனை தொடர்ந்து நியாய விலைகடைகளுக்கு வேட்டி, சேலை விநியோகிக்கப்படவுள்ளது. தரமாக 15 ரகங்களில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது. 

வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் மொத்தப்பணிகளும் முடித்து அனைவருக்கும் வழங்கப்பட்டுவிடும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Pongal Gift Vetti Selai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->