மக்கள் வயிற்றுல அடிச்சுதான்... இதுல என்ன பெரும வேண்டிக்கிடக்கு? அதுக்கு ரெண்டு ஐஏஎஸ்ஸுங்க! கொந்தளித்த நடிகை!
TNPDCL TNEB TANGEDCO DMK Govt Senthilbalaji
தமிழக அரசின் மின்சார துறையின் (TANGEDCO) அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், "கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 19.47% இருந்த தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் ஒட்டு மொத்த தொழில் நுட்ப மற்றும் வணிக இழப்பீடு தற்போது 11.39% என வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தனது சமூக வளையதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை வினோதினி, "அதாகப்பட்டது, உங்க net lossஅ கம்மி பண்ணியிருக்கீங்க.
ஆனா இதை நீங்க
1. புதிய மாற்று மின் உற்பத்தி (Solar) மூலமாகவோ
2. தற்போது இருக்குற infrastructureலேர்ந்து மின்சார விரையத்தை கம்மி பண்ணதன் மூலமாகவோ
3. மின்சாரத் திருட்டை கம்மி பண்ணதன் மூலமாகவோ
4. ஊழியர்களின் எண்ணிக்கையையோ அல்லது ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தைக்கம்மி பண்ணதன் மூலமாகவோ செய்யல.நடுத்தர மக்கள் வயிற்றுல அடிச்சுதான் இதை செஞ்சிருக்கீங்க. இதுல என்ன பெரும வேண்டிக்கிடக்கு? இதுக்கு ஒரு வாரியம் அதுக்கு ரெண்டு ஐஏஎஸ்ஸுங்க" என்று கட்டமாக விமர்சித்துள்ளார்.
English Summary
TNPDCL TNEB TANGEDCO DMK Govt Senthilbalaji