அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி.!!
Udhayanidhi Stalin inaugurated Alankanallur jallikattu
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழ்நாடு முழுவதும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர்.
மொத்தம் 1200 காரி காளைகள் சீறிப்பாய உள்ள நிலையில் அதனை அடைக்க 700 மாறுபடு வீரர்கள் களத்தில் இறங்க உள்ளனர். இந்த காலை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு முன்பு அனைத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று துவங்கி வைத்துள்ளார். இன்று மாலை நடைபெறும் பரிசு வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு அவர் கைகளால் பரிசுகள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Udhayanidhi Stalin inaugurated Alankanallur jallikattu