விருதுநகரில் தோண்ட தோண்ட தங்கம்! "தங்கத்தால் செய்யப்பட்ட மணி" அமைச்சர் பகிர்ந்த செய்தி!
Viruthunagar Vempakottai Akazhvaivu Gold mani
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் "தங்கத்தால் செய்யப்பட்ட மணி" ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ளன.
English Summary
Viruthunagar Vempakottai Akazhvaivu Gold mani