பெற்ற மகனை கொலை செய்த தாய் - சென்னையில் பயங்கரம்.!
women arrested for murder son in chennai
சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் மீனாட்சி - சரவணன் தம்பதியினர். இவர்களுடைய மகன் ஜெயகாந்த். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி கணவரை பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு மீனாட்சி தனது 6 வயது மகனுடன் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் மீனாட்சி, தனது சொந்த மகனே மறுமணம் செய்ய தடையாகவும் இருந்ததாக கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, மீனாட்சி மகனை அடித்து மயக்கமடைய செய்து, முகத்தில் தலையணையால் அழுத்திக் கொலை செய்து உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார்.

உடல் பாதி எறிந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்க் கால்வாயில் வீசியுள்ளார். இதையடுத்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், சந்தேமடைந்த அக்கம்பத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மீனாட்சியின் மகன் திடீரென மாயமானது தெரிந்தது.
இது தொடர்பாக, மீனாட்சியிடம் போலீசார் விசாரித்தபோது, மகனை கொலை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றமும் நிரூபிக்கப்பட்டதால், மீனாட்சிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அபராதம் கட்ட தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
women arrested for murder son in chennai