லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய அமெரிக்க டென்னிஸ் வீரர்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ பரவல் நீடித்து வரும் நிலையில், தீயைத் தூண்டிய காற்று, மேலும் அதிகமாகும் என்று முன்னெச்சரிக்கையால், நகரின் பல பகுதிகளும் அதி தீவிர மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த காட்டு தீ அதிக அச்சத்தை கொடுத்துள்ளது.

இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு இது வரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நகரின் மேற்கு பகுதியில் உருவான பெரிய அளவிலான பாலிசேட்ஸ் காட்டுத் தீக்கு 23 ஆயிரத்திற்க்கும் அதிகமான பரப்பு எரிந்து நாசமாகி உள்ளது. தற்போது இதில் 18  சதவீதம் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற இரண்டு காட்டுத் தீ இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும், இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்ற உத்தரவால் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியே தங்கி உள்ளனர். அத்துடன், இரவில் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காட்டுத்தீக்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் நிவாரண பணிகளுக்காக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வென்ற ரூ.71 லட்சம் பணத்தை வழங்க உள்ளதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் டெய்லர் பிரிட்ஸ் அறிவித்துள்ளார்.

தன்னை வளர்த்த ஊருக்கு தன்னால் இயன்றதை செய்வதாகவும், மக்களுக்கு உதவ பலர் முன் வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American tennis player donates relief funds to those affected by the Los Angeles wildfires


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->