அமெரிக்கர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய எலான் மஸ்க்; அடுத்து என்ன நடக்க போகுதோ..?
Elon Musk shocked Americans
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமாவார். உலகின் முன்னணி சமூக வலைத்தளமான டுவிட்டரைக் கடந்த 2022 -ஆம் ஆண்டு விலைக்கு வாங்கி, அதற்கு 'எக்ஸ்' என்று பெயர் மாற்றியமைத்தார். அதன் பின் தனது அதிரடி பதிவுகளால் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
இதனிடையே நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பிற்கு ஆதரவாக 'எக்ஸ்' தளத்தில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார் எலான் மஸ்க்.
![](https://img.seithipunal.com/media/mus-djalb.jpg)
அதற்கு பலனாக டிரம்ப்பும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியானார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) தலைவராக எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்த்துள்ளார். இந்த DODGE குழு அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் வேலையை செய்வதற்க்காங்க உருவாக்கப்பட்டது.
அதன்படி, அமெரிக்காவின் அரசுத் துறையை ஒட்டு மொத்தமாக கலைத்து விட்டு புதிதாக உருவாக்க வேண்டும் என்ற எலான் மஸ்க் அதிரடியாக கூறியுள்ளார். துபாயில் நடைபெற்ற உலக அரசுத்துறை தொடர்பான உச்சி மாநாட்டில் பேசிய அவர், மக்களின் ஜனநாயக ஆட்சி முறைக்கு அரசுத் துறைகள் எதிராக இருக்கின்றன என்று பகிரங்கமாகி குற்றம் சாட்டினார்.
![](https://img.seithipunal.com/media/mus el-y2rq8.jpg)
அதாவது, அரசுத் துறைகளில் ஆட்களை நீக்குவதற்கு பதில் ஒட்டு மொத்தமாக கலைத்து விட்டுச் சீரமைப்புகளுக்கு பின் அவற்றை புதிதாக உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், வயல்களில் தேவையில்லாத கலைகளை வேரோடு அகற்ற வேண்டும். இல்லையென்றால் அது மீண்டும் மீண்டும் வளரக்கூடும். அதேபோன்று தான் அரசுத் துறையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். என்று பேசியிருந்தார்.
ஏற்கனவே அமெரிக்க அரசுத் துறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அவர்களை எலான் மஸ்க் வெளியேற்றி வரும் நிலையில், எலான் மஸ்கின் இந்த கருத்து அரசு ஊழியர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Elon Musk shocked Americans