அவுஸ்திரேலிய வீரர்கள் மூவருக்கு 05 ஆண்டுகள் தடை விதித்துள்ள இந்தோனேசியா..! - Seithipunal
Seithipunal


சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்காரா மாகாணத்தில் லோம்போக் என்ற தீவு உள்ளது. இங்குள்ள ரிஞ்சானி தேசிய பூங்கா அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. 

இதனால்,  ரிஞ்சானி மலை சாகச வீரர்களுக்கு உகந்த இடமாக இருக்கிறது. இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் சாகச வீரர்கள் அங்கு வந்து செல்கின்றனர்.

இங்கு மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 03 வாலிபர்கள் அங்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். சாகச வீரர்களான அவர்கள் தடையையும் மீறி ரிஞ்சானி மலை மீது ஏறியுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் 03 பேருக்கும் சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் அடுத்த 05 ஆண்டுகளுக்கு ரிஞ்சானி தேசிய பூங்காவுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indonesia has banned three Australian adventurers for 05 years


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->