சமூகப் பொருளாதார வளர்ச்சி நிபுணரான லட்சுமி சந்த் ஜெயின் பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


லட்சுமி சந்த் ஜெயின் :

சமூகப் பொருளாதார வளர்ச்சி நிபுணரான லட்சுமி சந்த் ஜெயின் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ராஜஸ்தானில் பிறந்தார்.

இவர் வெள்ளையனே வெளியேறு போன்ற சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டவர். மேலும் இந்தியத் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்திய கூட்டுறவு யூனியன் நிறுவப்பட்டதற்கும், அதன் கொள்கைகளை கைவினைப் பொருட்கள் தொழில்களுக்குப் பயன்படுத்துவதற்கும் உதவினார்.

1966ஆம் ஆண்டு நுகர்வோர் சங்கிலித் தொடர் கூட்டுறவு விற்பனை நிலையங்களை ஆரம்பித்து நகரங்களில் பொருட்கள் நியாய விலையில் கிடைக்க வழிவகுத்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, ரமன் மக்சேசே விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளருமான இவர் பாவர்ட்டி, என்விரான்மென்ட் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக இறுதிவரை பாடுபட்டு வந்த லட்சுமி சந்த் ஜெயின் 2010ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lakshmi chand jain birthday 2021


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->