காதல் செய்யுங்கள்!....இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது - ரஷ்ய அதிபர் புதின்! - Seithipunal
Seithipunal


உலக அளவில் பரப்பளவில் மிகப்பெரிய நாடாக உள்ள ரஷியாவில் 1990ம் ஆண்டில் இருந்து பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. மேலும் 2 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையேரஷியாவில், 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 14.64 கோடி மக்கள் தொகை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தநிலையில் ரஷியாவில்  பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் கவலை அடைந்துள்ள அந்நாட்டு அதிபர் புதின், பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

அதில், உக்ரைனுடன் நடைபெற்று வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு என்றும், வேலையில் மிகவும் பிசியாக இருப்பது சரியான காரணம் அல்ல. இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். 

மேலும், வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அதிபர் புதினின் சர்ச்சை பேச்சு  தற்போது பேசு பொருளாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து உள்ளனர். 


 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Make love Work should not be an obstacle to reproduction Russian President Putin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->