நாசாவின் அடுத்த அப்டேட்! சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு எப்போது திரும்பப் போகிறார்?
NASAs next update When Sunita Williams going return Earth
அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா,அமெரிக்க விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்பும் புதிய தேதியை அறிவித்துள்ளது.
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதில் சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக நேற்று அதிகாலை இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி வீரர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
English Summary
NASAs next update When Sunita Williams going return Earth