"எவரெஸ்ட் சிகரம்".. 26 முறை ஏறி சாதனை படைத்த நேபாளி "ஷெர்பா பசாங் தவா"..! - Seithipunal
Seithipunal


உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 26வது முறையாக ஏறி 46 வயதான நேபாளி ஷெர்பா பசாங் தவா சாதனை படைத்துள்ளார். ஒரு ஹங்கேரிய வாடிக்கையாளருடன் ஏறிய பசாங் தவா இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் இரண்டாவது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அரசாங்க சுற்றுலா அதிகாரி பிக்யன் கொய்ராலா, ஷெர்பா பசாங் தவா 8,849 மீட்டர் தூரத்தை 26 முறை ஏறி சக நேபாள வழிகாட்டியான கமி ரீட்டா ஷெர்பாவின் சாதனையை சமன் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்பொழுது எவரெஸ்ட் சிகரத்தை ஏறி வரும் கமி ரீட்டா ஷெர்பா உச்சியை அடைந்தால் மற்றொரு உலக சாதனை படைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானை சேர்ந்த பெண் நைலா கியானி இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான ஏறும் பருவத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் வெளிநாட்டவர் என அதிகாரி தவா பியூட்டி தெரிவித்துள்ளார். மேலும் எவரெஸ்ட் சிகரத்தை ஏற இந்த ஆண்டு 467 வெளிநாட்டவர்களுக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepali Sherpa Pasang Dawa climbs mount Everest record 26th time


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->