அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசியுள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி அவருடன் பேசியுள்ளார்.

இந்த உரையாடலில், இருவரும் இருதரப்பு உறவு குறித்து பேசியதாகவும், உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "எனது அன்பு நண்பர் டொனால்டு டிரம்புடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது பதவி காலத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

நமது மக்களின் நலனுக்காகவும், உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்" என்று அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi spoke to US President Donald Trump on the phone


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->