பிரபஞ்ச அழகி 2022 பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்'போனி கேப்ரியல்.! - Seithipunal
Seithipunal


2022ஆம் ஆண்டிற்கான 71ஆவது பிரபஞ்ச அழகிப்போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றது. சுமார் 75 நாடுகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், பிரபஞ்ச அழகிக்கான கிரீடத்தை கைப்பற்ற போட்டியிட்டனர்.

இந்நிலையில் 2022-க்கான பிரபஞ்ச அழகிக்காண பட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான ஆர்'போனி கேப்ரியல் கைப்பற்றியுள்ளார். கடந்த முறை பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் ஹர்னாஸ் சந்து, பிரபஞ்ச அழகிக்காண கிரீடத்தை இந்த ஆண்டு வெற்றியாளர் ஆர்'போனி கேப்ரியலுக்கு சூட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து வெனிசுலா நாட்டைச் சேர்ந்த டயானா சில்வா 2வது இடத்தையும், டொமினிகன் குடியரசு நாட்டைச் சேர்ந்த அமி பெனா 3வது இடத்தையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்தியா சார்பாக போட்டியிட்ட தீவிதா ராய் பிரபலமான சோன் சிரியா உடையணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்ததுடன் இறுதிப்பட்டியலில் 16வது இடத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

R Bonnie Gabriel from America crowned as Miss Universe 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->