கடும் பனிப்புயல் பாதிப்பு: அமெரிக்காவில் 4 பேர் பலி; 2,100 விமானங்கள் ரத்து! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையிலான பனிப்புயல் பாதிப்பால் 4 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சிறிய அளவில் பனிப்புயல் பாதிப்பு இருக்கும்,ஆனால் இந்தாண்டு பனிப்புயல் பாதிப்பு கடுமையாக இருந்துள்ளது.இந்தநிலையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழிவும் காணப்படுகிறது என சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் அந்நாட்டில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், முன்னெப்போதும் காணப்படாத பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா மற்றும் மில்வாகீ பகுதிகளில் 4 பேர் மரணம் அடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் கடுமையான பனிப்பொழிவால் சாலை மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதுஎன்றும்  டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன என்றும் பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அங்குள்ள லூசியானா மாகாண பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன என்றும்  அந்த மாகாண கவர்னர் ஜெப் லாண்ட்ரி, அடுத்த 7 நாட்களுக்கு கடுமையான குளிர் இருக்கும். அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சவானா நகர மேயர் அறிவுறுத்தி உள்ளார்.இதேபோன்று, ஜார்ஜியா மாகாணத்தின் பருவகால புயல்கள், பனி மற்றும் அடர்பனியை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Snowstorm kills 4 in US | More than 2,100 flights cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->